’தல’ மாஸ்... தமிழகம் முழுவதும் 100க்கும் அதிகமான தியேட்டர்களில் இன்று வெளியாகிறது அஜித்தின் 'கிளாடியேட்டர்ஸ்' டிரெய்லர்!

 
அஜித் கிளாடியேட்டர்ஸ்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித்குமார், தனது திரைப்படப் பணிகளுக்கு நடுவே தனது நீண்டகால ஆர்வமான கார் பந்தயங்களில் (Car Racing) தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சர்வதேச அளவில் கவன ஈர்த்துள்ள அவரது இந்த கார் பந்தயப் பயணத்தை முழுமையாக மையமாகக் கொண்டு தற்போது ஒரு பிரத்யேக ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

அஜித்

நடிகர் அஜித்குமாரின் கார் பந்தய அனுபவங்கள் மற்றும் அதன் பின்னணிச் சவால்களை விவரிக்கும் விதமாக 'கிளாடியேட்டர்ஸ்: பர்சூட் ஆஃப் சேலஞ்ச்' என்ற பெயரில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆவணப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று மாலை திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜித் ரேசிங்

சுமார் 3 நிமிடங்கள் மற்றும் 49 வினாடிகள் ஓடக்கூடிய இந்த விறுவிறுப்பான காணொலியை, தமிழகம் முழுவதிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஒரே நேரத்தில் வெளியிடப் படக்குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். வெள்ளித்திரையில் நடிகர் அஜித்தின் மிரட்டலான கார் ரேஸிங் அவதாரத்தை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், அவரது அகில இந்திய மற்றும் தமிழக ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும் பெரும் எதிர்பார்ப்பிலும் ஆழ்ந்துள்ளனர்.