வெளியான சஸ்பென்ஸ்... தளபதி 69 ல் 3 கதாநாயகிகள்... த்ரிஷா, சமந்தா, 3 வது நாயகி இவங்க தான்!
தமிழ் ரசிகர்களால் இளையதளபதியாக கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிஉள்ளார். தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து வரும் நிலையில் கடைசியாக இன்னும் ஒரே ஒருபடத்தில் மட்டும் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இவரது கடைசி படத்தை இயக்க இருக்கும் இயக்குநர் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதிவும் வெளியாகவில்லை தற்போது இது குறித்து சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

தற்போது நடிகர் விஜய், முதல் முறையாக வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்த்து GOAT படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ராஜஸ்தான் மற்றும இஸ்தான் புல் இடங்களில் நடைபெற்றது. அதனையடுத்து கேரளா, ரஷ்யா எனத் தீவிரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.இவரது கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் 3 கதாநாயகிகள். ஒருவர், நடிகை த்ரிஷா. இவர் GOAT படத்திலும் ஒரு பாடலுக்கு அவர் நடனமாட உள்ளதாக தெரிகிறது.

தளபதி 69 படத்திலும் விஜய்க்கு ஜோடியாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அடுத்ததாக சமந்தா. 3வதாக சமீபத்தில் தென்னிந்திய மார்க்கெட்டை பிடித்திருக்கும் மிருணாள் தாகூர். இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், தெலுங்கில் வெளியான ‘சீதா ராமம்’ படம் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவருடைய ‘ஹை நன்னா’ படமும் ஹிட் அடித்தது. இவரையும் தளபதி 69 படத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
