3 மொழிகளில் வெளியாகும் ’ தண்டேல்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் !

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நாக சைதன்யா. தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தண்டேல். இப்படத்தில் நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி இணைந்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் ஜாவத் அலி பாடிய புஜ்ஜிக் குட்டி என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
தண்டேல் ராஜு & சத்யா are coming to win over you with their love story ❤️#Thandel grand TAMIL NADU RELEASE by @DreamWarriorpic on FEBRUARY 7th ❤️🔥#ThandelonFeb7th pic.twitter.com/1BRAYpCWry
— Thandel (@ThandelTheMovie) January 18, 2025
புஜ்ஜிக் குட்டி பாடல் வரிகளை விவேகா எழுதி உள்ளார். சந்தூ மாண்டேட்டி இயக்கத்தில் Bunny வாஸ் தயாரித்துள்ளார். நவின் நூலி படத்தொகுப்பில் ஷாம்தத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் நாக சைதன்யா மீனவனாக நடித்துள்ளார். கடல் சார்ந்த காதல் கதையாக இந்த தண்டேல் படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் பிப்ரவரி 7ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தண்டேல் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!