ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் வாகனத்திற்குள் புகுந்த பாம்பு மீட்பு
தஞ்சாவூரில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த பாம்பை, தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்டனர்.
தஞ்சாவூர் நகரப் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் இருசக்கர வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்த வாகனத்தின் உள்பகுதிக்குள் பாம்பு ஒன்று புகுந்து பதுங்கியிருப்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இருசக்கர வாகனத்தின் சில பாகங்களைக் கழற்றி பாம்பைப் பிடிக்க முயன்றனர்.
அப்போது வாகனத்திலிருந்து திடீரென வெளியேறிய பாம்பு, சாலையில் சீறிப் பாய்ந்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு பாம்பைப் பாதுகாப்பாகப் பிடித்தனர்.பின்னர் அந்தப் பாம்பு அருகிலுள்ள வனப்பகுதியில் விடப்பட்டது.
