ஆரம்பமே அதகளம்... எ.வ.வேலுவுக்கு செக் வைத்த வெற்றி வலைக்காட்சி.. ஊழல் விவகாரம் வெளிவந்தது எப்படி?!

 
சிங்காரவேலன்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலுவுக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  எ.வ.வேலு மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எ.வ.வேலு உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊடகத் துறையில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய 'வெற்றி வலைக்காட்சி' புலனாய்வுச் செய்தியின் எதிரொலியாக இந்த அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த சில தினங்களாகத் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், முந்தைய திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மிகப்பெரிய ஊழல் முறைகேடுகள் குறித்த பிரத்யேகப் புலனாய்வுத் தொகுப்பு ஒன்றை 'வெற்றி வலைக்காட்சி' நேற்று வீடியோ ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தது. இந்த வீடியோ செய்தி சமூக வலைத்தளங்களிலும், பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பரவி வைரலானது. 

சிங்காரவேலன்

இந்தச் செய்தியின் தீவிரத்தன்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய வீடு, அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எ.வ.வேலுவுக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் இந்தச் சோதனை விரிவுபடுத்தப்பட்டது.

கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் , நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அது சார்ந்த முக்கியக் கோப்புகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.