இதனால் தான் கொன்று கூறுபோட்டேன்... பெங்களூரு இளம்பெண் கொலையில் சிக்கிய கொலையாளியின் டைரி!
சமாளிக்க முடியல... எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன்.. நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வந்தது. அந்த ஆத்திரத்தில் தான் வெட்டிக் கொலைச் செய்தேன். ஆத்திரம் தீராமல் தான் 50 துண்டுகளாக வெட்டினேன் என்று கொலையாளி எழுதியிருந்த டைரி போலீசாரிடம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பெண் மகாலட்சுமி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முக்தி ரஞ்சன் ராய் ஒடிசாவில் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். முக்தி மகாலட்சுமியின் உடலை 50 க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்ததாக கூறப்படுகிறது.
முக்தி ராய் எழுதிய தற்கொலைக் கடிதத்தை போலீசார் மீட்டனர், அதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அறிக்கைகளின்படி, ராய் செப்டம்பர் 3 ஆம் தேதி மகாலட்சுமியைக் கொன்றார். இதையடுத்து மகாலட்சுமியின் துண்டாக்கப்பட்ட உடல் செப்டம்பர் 21 அன்று அவரது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் கண்டெடுக்கப்பட்டது.
பலியானவரின் உடலை மீட்ட போலீசார், சந்தேக நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். கொலையை செய்துவிட்டு ராய் நகரை விட்டு ஓடிவிட்டார். ராய் தனது டைரியில் , "அவளைக் கொன்ற பிறகு, நான் அவளுடைய உடலை 59 துண்டுகளாகப் பிரித்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தேன். அவளுடைய நடத்தையில் விரக்தியடைந்ததால் இதைச் செய்தேன்" , அவளுடைய செயலால் ஆத்திரமடைந்த நான் அவளைக் கொன்றேன்" என்று டைரியில் எழுதப்பட்டுள்ளது. ராய் வீட்டில் சோதனை நடத்திய போது இந்த டைரி பதிவை போலீசார் கண்டுபிடித்தனர். ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள மரத்தில் ராய் புதன்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராய் புதன்கிழமை பாண்டி கிராமத்திற்குத் திரும்பியதாகவும், வீட்டில் தங்கியிருந்ததாகவும், பின்னர் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவரது உடலை அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர். சம்பவ இடத்தில் இருந்த அவரது பை, லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட பல பொருட்களையும் போலீசார் மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஹேமந்த் தாஸ், தனது மனைவி மகாலட்சுமிக்கு அஷ்ரஃப் என்ற நபருடன் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் கூறினார். ஒரு மாதத்திற்கு முன்பு நெலமங்கலத்தில் உள்ள தனது மகளைப் பார்க்க சென்றபோது தான் கடைசியாக அவளைப் பார்த்ததாக அவர் கூறினார்.
திருமணமாகி ஆறு வருடங்கள் ஆனதாகவும் கருத்து வேறுபாடு காரணமாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு பிரிந்ததாகவும் கணவர் தாஸ் குறிப்பிட்டுள்ளார். தகராறு காரணமாக மகாலட்சுமி தனக்கு எதிராக போலீசில் புகார் அளித்ததாகவும் அவர் கூறினார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!