"இதுக்காகத் தான் தவெகவில் இணைகிறேன்..." - விஜயபாஸ்கர் காரசார பேட்டி!

 
சி.விஜயபாஸ்கர்

 

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தவெக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் கட்சியில் இணைவதற்காகத் தனது பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் வந்துள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தான் அதிமுகவிலிருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்து ஊடகங்களுக்குக் காரசாரமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக அதிமுக தலைமைக்கும் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே நீடித்து வந்த உள்கட்சிப் பூசல் மற்றும் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரங்களைத் தொடர்ந்து இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகச் சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக தலைமையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் சில தனிப்பட்ட மற்றும் தவறான அரசியல் முடிவுகளின் காரணமாகவே தான் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இபிஎஸ் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி

அதிமுக தற்பொழுது முற்றிலும் தவறான பாதையில் பயணிப்பதாகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் ஒரு நேர்மறையான மாற்று அரசியலை வழங்குவதற்காகவும் தாங்கள் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது கொள்கைகளை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை, கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து தவெகவில் இணைவதற்காகப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மாமல்லபுரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களின் அதிமுக உள்கட்டமைப்பே முற்றிலும் தவெகவோடு இணையும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. புதுக்கோட்டையைச் சேர்ந்த 59 பொதுக்குழு உறுப்பினர்களும், கரூரைச் சேர்ந்த 49 பொதுக்குழு உறுப்பினர்களும் 200-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 7 மணி நேரத்திற்கும் மேலாகப் பயணித்து மாமல்லபுரம் வந்து சேர்ந்துள்ளனர்.

அதிமுக சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

இன்னும் சற்று நேரத்தில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோருடன் இணைந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம்.ஆனந்தன், எஸ்.வளர்மதி மற்றும் இளம்பை ஆர்.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் அதிகாரப்பூர்வமாகத் தங்களைச் சென்னை கோவளம் மற்றும் மாமல்லபுரம் நிகழ்வுகளில் தவெகவில் இணைத்துக் கொள்ளவுள்ளனர்.

கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த மாற்றுக்கட்சியினர் வரவேற்பு விழாவைத் தற்பொழுது முன்னின்று நடத்தி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய இந்த மிகப்பெரிய அரசியல் கட்சித் தாவல், தமிழகத்தின் பாரம்பரிய கட்சிகளுக்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.