தவெக 3-வது மாநில மாநாடு.. முப்பெரும் விழாவாக நடத்த முதற்கட்ட பணிகள் தீவிரம்!

 
தவெக மாநில மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின்  3-வது மாநில மாநாட்டை திருச்சி அல்லது நெல்லையில் முப்பெரும் விழாவாக நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.

விஜய் பிரச்சாரம்

கட்சியின் ஆண்டு விழா, தேர்தல் வெற்றி மற்றும் தலைவர் விஜய்யின் பிறந்தநாள் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, 'வெற்றி மாநாடு' என்ற பெயரில் இந்த மாநாட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகளில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். 

விஜய்

இதற்கிடையே, மாவட்ட அளவில் கல்வி மற்றும் பிற துறைகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கும் விழாவிற்கான ஆயத்தப் பணிகளிலும் மாவட்டச் செயலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.