“தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; நிச்சயம் சிதறிப்போய்விடும்” - எடப்பாடி பழனிசாமி!

 
எடப்பாடி

மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்துத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத்தைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெக கட்சியை ஒரு நெல்லிக்காய் மூட்டைக்கு ஒப்பிட்டார். மூட்டையை அவுத்துவிட்டுக் கொட்டினால் நெல்லிக்காய்கள் எப்படித் திசைக்கு ஒன்றாகச் சிதறி ஓடுமோ, அதேபோல் தவெக கட்சியும் விரைவில் சிதறிப்போய்விடும் என்று அவர் விமர்சித்தார்.

எடப்பாடி இபிஎஸ்

தவெக கட்சியின் உண்மையான மூலதனமே சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ரீல்ஸும்  ரிலீஸ்களும்தான் என்று கிண்டலடித்த அவர், வெறும் விளம்பரங்களை மட்டுமே நம்பி அந்த இயக்கம் இயங்கி வருவதாகக் குற்றம்சாட்டினார்.

அதிமுகவில் இருந்த வேட்பாளர்களை விலைக்கு வாங்கித் தவெக தனது வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சட்டமன்ற உறுப்பினரின் ராஜினாமா பரிசீலனையில் உள்ள நிலையில் மாற்றுக்கட்சியில் இணைவது சட்டவிரோதமானது என்றும் சுட்டிக்காட்டினார்.

எடப்பாடி

வரவிருக்கும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் தனது டெபாசிட்டை இழக்க வேண்டும் என்றும், அதற்கு மக்கள் உரிய தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தமதூ வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.