பரந்தூரில் மக்களை நேரடியாக சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்... பயணத்திட்டம், கட்டுப்பாடுகள் , முழு தகவல்கள் !

 
தவெக

  
 
 தமிழகத்தில் சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5000  ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழகஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனை எதிர்த்து  அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று பரந்தூர் பகுதிக்கு வருகை தருகிறார். இதற்கான அனுமதி வழங்கப்பட்ட நிலையில்  போலீசார் தரப்பில் சில நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.  

விஜய்


முதலில் பரந்தூர் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் சந்திக்க  அனுமதி மறுக்கப்பட்டு, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு போராட்டத்தில் ஈடுபடும் ஊர்மக்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. அதே போல விஜய் உட்பட  குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து விஜய் சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டார தவெக தொண்டர்களுக்கு  வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக  தகவல் வெளியானது. தனது வருகையை அறிந்து பரந்தூர் பகுதிக்கு கட்டுப்பாடுகளை மீறி தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என விஜய் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது .  

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் வருகை குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்   “முதலில் ஊருக்குள் சென்று மக்களை நேரடியாக சந்திக்க தான் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு  பாதுகாப்பு கருதி அனுமதி தரப்படவில்லை. இதுகுறித்து தளபதி  ’மக்களை சந்திக்க தானே வருகிறேன். எங்கு சந்தித்தால் என்ன? அவர்கள் (காவல்துறை) எங்கு கூறுகிறார்களோ அங்கு சந்திக்கிறேன்.’ என கூறிவிட்டார்” 
மேலும், “காலை 11, 12 மணி முதல் 1 மணிக்குள்  ஏகனாபுரத்தில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நிகழ உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் ஊர்மக்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுவர்.” என புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறினார்.
பரந்தூர் ஏகனாபுரம் தனியார் மண்டபத்தில் விஜய்யை சந்திக்க வரும் போராட்ட குழுவினருக்கு காலை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர் வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தவெக கட்சி தலைவராக முதல் முறையாக விஜய் மக்களை நேரடியாக களத்தில் சந்திக்க உள்ளதால் இந்த சந்திப்பு  அரசியல் வரலாற்றில் மிக முக்கிய ஒன்றாக  பார்க்கப்படுகிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web