நாளை தவெக கட்சி கொடி அறிமுகம்... செப்டம்பர் 22 கழக மாநாடு!

தமிழகத்தில் இளைய தளபதி நடிகர் விஜய் சமீபத்தில் கட்சி ஆரம்பித்து அதில் உறுப்பினர்களை சேர்த்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கட்சிக்கு 2026 தேர்தல் தான் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கழகத்தின் கட்சிக் கொடியை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் வியாழக்கிழமை காலை அறிமுகம் செய்து வைக்கிறார்.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் விஜய், கட்சியின் பொதுச்செயலா் புஸ்சி ஆனந்த் மற்றும் நிா்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் காலை 6 மணிக்கு பனையூர் அலுவலகம் வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திங்கள்கிழமை பனையூர் அலுவலகத்தில் மஞ்சள் நிற கொடியில், வாகை மலருக்குள் விஜய் உருவம் பொறித்த கொடி ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!