பிரிட்டனில் இருந்து தனியே பிரியும் 3 நாடுகள்... ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து கூட்டுப் பிரகடனம் வெளியீடு!

 
பிரிட்டன் அயர்லாந்து வேல்ஸ் ஐரோப்பா

பிரிட்டன் அரசியலமைப்பின் கீழ் இயங்கி வரும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகள் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வது குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளன.

வேல்ஸ் தலைநகர் கார்டிப் நகரில் நடைபெற்ற மாநாட்டில், ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி, வேல்ஸ் முதல் அமைச்சர் ரூன் அப் இயோர்வெர்த் மற்றும் வடக்கு அயர்லாந்து முதல் அமைச்சர் மிச்செல் ஓ'நீல் ஆகியோர் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

வரலாற்றுச் சில மாற்றங்களாக இந்த மூன்று நாடுகளிலும் தற்போது பிரிவினை மற்றும் சுதந்திரத்தை ஆதரிக்கும் கட்சிகளே ஆட்சியில் உள்ளன. இதன் அடிப்படையில், பிரிட்டனிடமிருந்து முழுமையாக விடுபட்டு ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் தனிநாடுகளாக மாறுவதற்கும், வடக்கு அயர்லாந்து அயர்லாந்துடன் இணைவதற்கும் பொது வாக்கெடுப்பு நடத்தும் உரிமையை இந்தக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

பிரிட்டன் அரசின் மத்தியக் கட்டுப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டதாகவும், தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை தங்களுக்கு உண்டு என்றும் தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனுடன் இணைந்து செயல்படுவதற்கான விருப்பமும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அயர்லாந்து ஒன்றிணைவதை விரும்புவதாக அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துருவமும், பிரிட்டன் பிரதமர் மக்களின் ஒருமித்த கருத்து மற்றும் பொருளாதாரச் சீரமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.