கைவிட்ட கள்ளக்காதலி... எலக்ட்ரிஷியனின் வெறிச்செயல்!

 
பலாத்காரம் காதல் கள்ளக்காதல்

மயிலாடுதுறையில் கள்ளக்காதலி தன்னுடன் பேச மறுத்த ஆத்திரத்தில், அவரது ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் கசியவிட்ட எலக்ட்ரிஷியன் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை கூறைநாடு எடத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வரும் இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான திருமணமான ஒரு பெண்ணுடன் மணிகண்டனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணின் அந்தரங்கப் படங்களை மணிகண்டன் தனது செல்போனில் ரகசியமாகச் சேமித்து வைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக அந்தப் பெண் மணிகண்டனுடனான பழக்கத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார். மணிகண்டன் போன் செய்தாலும் சரியாகப் பேசாமல் அவரைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளார். தனது பேச்சை அந்தப் பெண் மீறுவதை சகித்துக் கொள்ள முடியாத மணிகண்டன், "நீ என்னுடன் தொடர்ந்து பேசாவிட்டால், என்னிடம் இருக்கும் உன்னுடைய ஆபாசப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்" என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

தன்னுடைய மிரட்டலுக்கு அந்தப் பெண் பணியாததால், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மணிகண்டன், தான் சொன்னபடியே ஒரு சில ஆபாசப் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதனைப் பார்த்து நிலைகுலைந்து போன அந்தப் பெண், தனது குடும்ப மானம் கப்பலேறுவதை எண்ணி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பெண்ணின் புகாரைத் தொடர்ந்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரணை நடத்திய மயிலாடுதுறை போலீசார், மணிகண்டனை அதிரடியாகக் கைது செய்தனர். அவர் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். விசாரணையில் அவர் குற்றத்தைச் ஒப்புக் கொண்டதையடுத்து, அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மணிகண்டன், சிறையில் அடைக்கப்பட்டார்.

மனைவி, பிள்ளைகள் இருந்தும் மற்றுமொரு பெண்ணுடன் பழக்கம் வைத்துக் கொண்டு, இறுதியில் அவரது வாழ்க்கையையே சீரழிக்க முயன்ற மணிகண்டனின் செயல் மயிலாடுதுறை பகுதியில் பெரும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.