கடும் பனிமூட்டத்தால் நேர்ந்த கோர விபத்து.. 12 பேர் பரிதாபமாக பலி..!!
Updated: Oct 26, 2023, 12:20 IST

கர்நாடகவில் ஏற்பட்ட கோர விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் தேசிய நெடுஞ்சாலை 44-ல் சென்று கொண்டிருந்த டாடா சுமோ, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது மோதியது. எதிரே நின்று கொண்டிருந்த லாரி கடுமையான பனிமூட்டம் காரணமாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
பேகேபல்லியில் இருந்து சிக்கபள்ளாப்பூர் சென்று கொண்டிருந்த டாடா சுமோ விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது. மோதிய டாடா சுமோ ஆந்திர மாநில பதிவெண் கொண்டது. இதனையடுத்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிக்கபள்ளாப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
From around the
web