சொந்த குழந்தையை ஆள் வைத்து கடத்த முயன்ற தந்தை.. பேரதிர்ச்சியடைந்த மனைவி..!!

 
ராஜி

 பெற்ற குழந்தையை கடத்துவதற்காக ஆள் அனுப்பிய தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த நரசிங்கபுரம் முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீராம். இவரது மகள் சௌமியா. இவருக்கும் நடுவலூரைச் சேர்ந்த குணாளன் மகன்  ராஜி என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி  குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகக் ௯றப்படுகிறது.

இந்நிலையில் மனைவி சௌமியா கணவரைப் பிரிந்து ஓராண்டாக அவரது  பெற்றோர் வீட்டில் அம்மன் நகர் பகுதியில் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சௌமியாவின் கணவர் ராஜி மற்றும் அவரது தந்தை குணாளன் ஆகியோர்  பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அடியாட்களளை வைத்து நேற்றிரவு  வீட்டிற்கு  சென்று அவரது வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து உள்ளே சென்று சௌமியாவின் குழந்தையை கடத்த முயன்று அடியாட்களுக்கும், சௌமியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி வைரலானது.

case filed against 10 persons who are try to kidnap child in salem district vel

மேலும் இதுகுறித்து ஆத்தூர் நகர போலிசில் சௌமியா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குழந்தையை கடத்த முயற்சி செய்த கணவனின் தந்தை உட்பட 10 பேர் மீது நகர போலீசார் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து  பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பிரதீப், சௌந்தர், தனசேகரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். குடும்பத் தகராறு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழும் நிலையில் கணவனின் தூண்டுதலின் பேரில் குழந்தையை கடத்த முயற்சி செய்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web