அட்ரஸ் சொன்னது குத்தமாடா?... டிவி, பிரிட்ஜ் என நள்ளிரவு வரை வந்துக் குவிந்த பொருட்கள்... இன்ஸ்டா பிரபலத்துக்கு நேர்ந்த துயரம்!

 
இன்ஸ்டா

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளையாட்டாகத் தனது வீட்டு முகவரியைப் பகிர்ந்து கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவருக்கு, மர்ம நபர்கள் கேஷ் ஆன் டெலிவரி முறையில் தொடர்ச்சியாகப் பொருட்கள் வரவழைத்துத் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் பிரபலமான வீரமணி என்பவர், தனது முகவரியை விளையாட்டாகப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டுள்ளார். இதனைத் தவறாகப் பயன்படுத்திய சில நெட்டிசன்கள், அவரது முகவரிக்குத் தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை கேஷ் ஆன் டெலிவரி முறையில் தொடர்ந்து ஆர்டர் செய்துள்ளனர்.

இன்ஸ்டா

தன் வீட்டின் விலாசத்திற்குத் தொடர்ச்சியாகப் பொருட்கள் வந்து கொண்டே இருந்ததால் பெரும் பொருளாதாரச் சுமைக்கும் மன உளைச்சலுக்கும் ஆளான வீரமணி, இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது எனக் கூறி தனது வீட்டை விட்டே வெளியேறிவிட்டதாகக் குறிப்பிட்டு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இணையவழிப் பிராங்குகளும் முறையற்ற செயல்களும் எத்தகைய தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சியாகப் பார்க்கப்படுகிறது.