விஜய்யின் வெற்றியைத் தீர்மானித்த அல்காரிதம்... ! ‘தி ரூட்’ ஜெகதீஷின் மெகா பிளான் பலித்தது எப்படி?!

 
ஜெகதீஷ் விஜய் ஜெகதீஷ் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருப்பதன் பின்னணியில், மிகத் துல்லியமான ‘டேட்டா அனலிட்டிக்ஸ்’ வியூகம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மூளையாகச் செயல்பட்டது விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் மற்றும் அவரது ‘தி ரூட்’ (The Route) நிறுவனம் என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, கடந்த 10 ஆண்டுகளாக அவரது டிஜிட்டல் பிம்பத்தைச் செதுக்கும் பணி ரகசியமாகத் தொடங்கப்பட்டது.  ‘தி ரூட்’ நிறுவனம் நவீன அல்காரிதம்களைப் பயன்படுத்தி, தமிழக இளைஞர்களின் மனவோட்டம், அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் மற்றும் தற்போதைய அரசியல் மீதான அதிருப்தி ஆகியவற்றைத் தரவுகளாக சேகரித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களைக் கண்டறிந்து, அங்கு விஜய்யின் பேச்சுகளையும், செயல்பாடுகளையும் சினிமா பாணி எடிட்டிங் மூலம் கொண்டு சேர்த்தனர்.

விஜய்

மரபுவழி அரசியலில் திண்ணைப் பிரச்சாரம் முக்கியமாக இருந்த நிலையில், விஜய் தரப்போ ‘டிஜிட்டல் திண்ணை’களை உருவாக்கியது. விஜய்யின் மாஸ் காட்சிகளையும், அரசியல் கருத்துக்களையும் மிகச் சுருக்கமான, கவர்ச்சிகரமான ரீல்ஸ்களாக மாற்றி வைரலாக்கினர். இது முதல்முறை வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

அடிமட்டத் தொண்டர்கள் வரை தகவல்களைக் கொண்டு செல்ல மிக வலிமையான வாட்ஸ்அப் கட்டமைப்பை உருவாக்கிய ஜெகதீஷ், அதன் மூலம் பொய் செய்திகளை முறியடித்துத் தனது தரப்பு நியாயங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

விஜய்

வெறும் சினிமா நட்சத்திரமாக இருந்த விஜய்யை, ஒரு ‘நிர்வாகத் திறன் கொண்ட அரசியல் தலைவர்’ என்ற பிம்பத்திற்கு மாற்றியது இந்த டிஜிட்டல் வியூகம் தான். பெரிய கட்சிகளின் ஐடி விங்குகள் திணறிக் கொண்டிருந்த வேளையில், ‘தி ரூட்’ நிறுவனம் மிக அமைதியாக ஒரு டிஜிட்டல் புரட்சியைச் செய்து முடித்துள்ளது. இந்த நவீன வியூகம் தான் இன்று விஜய்யை கோட்டையின் கதவு வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.