இடைத்தேர்தலுடன் முடிவுக்கு வந்த கூட்டணி... விசிக - கம்யூனிஸ்ட்கள் கூட்டணி முறிவு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக ஆகியவை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த அரசியல் கூட்டணி தற்போதைய இடைத்தேர்தலோடு முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2015-ஆம் ஆண்டில் மக்கள் நலக் கூட்டணி உருவானது முதல் சிபிஐ, சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை ஒரே அணியாகத் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வந்தன.

தவெக அரசுக்கு ஆதரவளிப்பது போன்ற விவகாரங்களில் கட்சிகளிடையே இணக்கமான சூழல் நிலவி வந்த நிலையில், அண்மையில் அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது தனித்துவமான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.
விசிக தலைவர் திருமாவளவன் தவெகவை ஆதரிக்கும் அரசியல் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த நிலைப்பாடுகளுக்கிடையேயான கருத்து வேறுபாடு காரணமாகத் தற்போது இந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
