திடீரென வெடித்து சுக்குநூறான ஆம்புலன்ஸ்.. 74 வயது நோயாளி பரிதாப பலி..!!
Updated: Nov 2, 2023, 18:05 IST

மும்பை - புனே விரைவுச் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 74 வயதான நோயாளியை அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நோயாளியை சொந்த ஊருக்கு கொண்டு சென்றபோது ஆம்புலன்ஸில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் 74 வயதான நோயாளி சம்பவ இடத்திலையே பலியானார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. ஆம்புலன்ஸில் பயணித்த 7 பேரும் உயிர் தப்பிய நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளி உயிரிழந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
From around the
web