ரூ.5 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம்... விருது பெற்றவர்களின் முழு லிஸ்ட் இதோ!

 
முதல்வர் விருது

திருவள்ளுவர் தினமான ஜனவரி 15ம் தேதி, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருதுகளும், பரிசுத்தொகையும் தமிழக அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2024ல் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 பேருக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கி கெளரவித்தார்.

விருது தமிழக அரசு

திருவள்ளுவர் விருது, அம்பேத்கர் விருது, பெரியார் விருது, கலைஞர் விருது, பாரதியார் விருது என 10 விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாடு அரசின் விருதுகளை பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் அல்லது ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் மதிப்புள்ள தங்க பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சாமிநாதன், மெய்யநாதன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

5 காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது.. முதல்வர் உத்தரவு!
தமிழ்நாடு அரசு விருதுகள் :

பெரியார் விருது – விடுதலை நாகேந்திரன்,  ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம்

அம்பேத்கர் விருது – வி.சி.க எம்.பி ரவிக்குமார், ரூ.5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம்  

திருவள்ளுவர் விருது – எழுத்தாளர் மு.படிக்கராமு. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம்  

காமராஜர் விருது – காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம்  

மகாகவி பாரதியார் விருது – கவிஞர் கபிலன். ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம்  

பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொன்.செல்வகணபதி. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம்  

கலைஞர் கருணாநிதி விருது – முத்துவாவாசி. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம்  

பேரறிஞர் அண்ணா விருது – எல்.கணேசன். ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம்  

திரு.வி.க விருது – ஜி.ஆர்.ரவீந்திரநாத், ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம்  

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் விருது – வெ.மு.பொதியவெற்பன். ரூ.2 லட்சம் பரிசுத்தொகை மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!