வங்கதேச போராட்டம் எபெக்ட்.. முஸ்லீம் குடும்பங்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய இந்து அமைப்பினர்!
வங்கதேசத்தில் ஆட்சி கவிழ்ப்பை அடுத்து, நாட்டில் நிலவும் அமைதியின்மையை பயன்படுத்தி அங்குள்ள சிறுபான்மை இந்துக்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை எதிர்த்து தலைநகர் டாக்காவில் இன்று பெரிய அளவில் பேரணி நடக்கிறது. நாட்டில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
#WATCH:अवैध बांग्लादेशियों
— (((Bharat)))®🕉🚩🔱 🇮🇳 🇮🇱 (@Topi1465795) August 10, 2024
के खिलाफ फूटा ग़ज़ियाबाद के हिन्दुओं का गुस्सा
झोपड़ियों में लगा रखे थे बांग्लादेश के झंडे
बांग्लादेश में मारे जा रहे हिन्दुओं व रेप की जा
रही बेटियों के हाल से नाराज़ है हिन्दू।।
⬇️#Bangladesh #Bangladeshi #Muslim #Gaziabad pic.twitter.com/YniikAI5ie
இடைக்கால அரசாங்கத் தலைவராகப் பதவியேற்றுள்ள முகமது யூனிஸுக்குப் பிரதமர் மோடியும் தனது வாழ்த்துச் செய்தியில் இதையே வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்புள்ளதால் எல்லைகளும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நிலைமை இப்படியிருக்க, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தீவிர வலதுசாரி அமைப்பான இந்து ரக்ஷா தல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காஜியாபாத்தில் உள்ள காவி நகர் குல்தார் ரயில் நிலையம் அருகே வசிக்கும் முஸ்லிம்களின் குடியிருப்புகளை சூறையாடினர்.
Loading tweet...
பங்களாதேஷில் இருந்து தலைவர் பிங்கி சவுத்ரி தலைமையிலான இந்து ரக்ஷா தல் அமைப்பினர் இந்த அமளியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சேரி பகுதியில் சுமார் 100-150 குடும்பங்கள் உள்ளன. இரவு 7.30 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம்களின் கூடாரங்களை இடித்துத் தகர்த்து அவர்களின் உடைகள் மற்றும் உடைமைகளை எரித்தனர். அவர்கள் முஸ்லிம்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். இந்த வாரத்தில் இக்குழுவினர் நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
