அக்டோபர் 6ல் மிகப் பெரிய மாற்றம்... இந்த ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையா விழிப்புணர்வுடன் இருங்க!

 
ஜோதிடம் ராசிபலன் குரு வியாழன்

அக்டோபர் 9ம் தேதி வியாழன் பகவானின் பிற்போக்கு இயக்கம் நிகழ இருக்கிறது. இதனால் 12 ராசிகளிலும் மிகப் பெரிய மாற்றங்கள் உருவாகலாம். இந்த நாட்களில் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை பயத்திற்கு பதிலாக வாய்ப்புகளாக பார்ப்பது நல்லது. வியாழனின் பிற்போக்கு இயக்கம் அனைத்து ராசி அறிகுறிகளையும் வெவ்வேறு வழிகளில் பாதிக்கிறது. இந்த நிகழ்வு உங்கள் ராசியை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறியலாம்.  

துலாம்: 

துலாம் ராசிக்காரர்களே பணவிஷயத்தில் எச்சரிக்கை அவசியம். ஜாமீன் கையெழுத்துக்கள், பணவாய்தாக்களில் இருந்து விலகி இருப்பது உத்தமம்.  செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். வியாழனின் பிற்போக்கு செல்வாக்கின் காரணமாக, ஒருவருக்கு சில மன உளைச்சல்கள் ஏற்படலாம், எனவே தியானம் மற்றும் யோகா போன்ற செயல்களின் மூலம் மன அமைதியைப் பெறலாம்.  

ஜோதிடம் ராசிபலன்

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களே உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் உருவாகலாம். பழைய நிகழ்வுகளால் மன அழுத்தங்கள் ஏற்படலாம்.  திடீர் பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் பணம், சொத்து விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம்.  ஆரோக்கிய குறைபாடுகளால் விரயச் செலவும் ஏற்படலாம் . இதனால் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.

தனுசு: 

தனுசு ராசிக்காரர்களே ஆரோக்கியம் மற்றும் பணியிடங்களில் பிரச்சனைகள் ஏற்படலாம். காரியத்தடை, காலதாமதத்தால் தொழிலில் நஷ்டம் உருவாகலாம். இதனால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலகட்டம். உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகிறது. அலுவலகத்தில் சகபணியாளர்களிடையே சலசலப்புகக்ள் இருந்தாலும்  காலப்போக்கில் சீராகும். பகையை வளர்க்க தேவையில்லை. பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு கிடைக்க காலம் இன்னும் கனியவில்லை.  

மகரம்: 

மகர ராசிக்காரர்களே குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் மோதல்கள் உருவாகலாம்.  வியாழன் மந்தநிலையில் இருந்தாலும், குடும்பத்தில் சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பொறுமையாக செயல்பட வேண்டும்.  நிதி விஷயங்களில் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுங்கள்.   திட்டங்களை மறுபரிசீலனை செய்வதற்கான நேரம் இதுவாக இருக்கும்.  

ஜோதிடம் ராசிபலன் குரு வியாழன்

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களே  புதிய முயற்சிகளுக்கு சாதகமான காலகட்டம் இது. தொழிலில் மாற்றம் செய்ய விரும்பினால் வெற்றி அடையலாம்.  உறவுகளில் சச்சரவுகள், மனக்கசப்புக்கள் உருவாகலாம். இலக்குகளில் கவனம் செலுத்தி மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.தெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலன்களை பெறலாம்.

மீனம்: 

மீன ராசிக்காரர்களே  தொழில் மற்றும் பணத்தில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் காலகட்டம் இது.  பணியிடத்தில்  நற்பெயர் அதிகரிக்கும், முயற்சிகள் பாராட்டப்படும். ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். வாழ்க்கையில் திடீர் சவால்களை பொறுமையுடன் எதிர்கொண்டால் சாதகமான பலன்களை பெறலாம்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web