எதிர்திசையில் சீறிப் பாய்ந்த பைக்... கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியான துயரம்!

 
தென்காசி

தமிழகத்தில் சமீப காலங்களாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்களிடையே ரேஸ் மோகம் அதிகரித்து வரும் நிலையில் உயிர் பயமின்றி சாலை விதிகளைப் புறக்கணித்து விபத்துக்குள்ளாகின்றனர். 

இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தவறான எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனம், எதிரே வந்த லோடு வேன் மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆலங்குளம் அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் முருகன் மற்றும் குமார் ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனம் சாலையின் தவறான எதிர்திசையில் சென்றதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

அந்த நேரத்தில் எதிரே வந்த லோடு வேன் மீது இருசக்கர வாகனம் பலமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த முருகன் மற்றும் குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

மேலும், இந்த விபத்து தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.