எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம்.. கிராஃபிக்ஸ் மூலம் முகத்தை வரைந்து தீவிர விசாரணையில் ஈடுபடும் போலீசார்!

 
ஓங்கூர் கொலை

ஏரியில் இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தின் முகத்தை கிரபிக்ஸ் மூலம் வரையபட்டு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த ஓங்கூர் அருகே திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பாதிரி, மதுரா ஊராட்சிக்கு உட்பட்ட கரிக்கம்பட்டி ஏரிக்கரையில் சுமார் 45 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

மாடுகளை மேய்க்க அந்த வழியாக சென்ற சிலர் இதை பார்த்து ஒலக்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  இதையடுத்து அங்கு விரைந்த எஸ்பி. தீபக் சிவாச்  சடலத்தை பார்வையிட்டு குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், உடல் கருகியதால் இறந்தவரை அடையாளம் காண முடியாத நிலையில், கிராபிக்ஸ் மூலம் இறந்தவரின் உருவத்தை போலீசார் வரைந்துள்ளனர்.

இந்த புகைப்படம் மூலம் இவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் ஒலக்கூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள 9498153644, 9498152864 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web