பகீர்... 17 வயசு தான்... ரசகுல்லா சாப்பிட்ட சிறுவன் மயங்கி சரிந்து உயிரிழப்பு!
இந்திய பாரம்பரியத்தில் உணவே உடலுக்கு ஆரோக்கியத்தையும், மருந்தாகவும் இருந்த காலங்கள் மெல்ல மெல்ல விடைபெற்று வருகின்றன. உணவே நஞ்சாக, விஷமாக , உயிருக்கு எமனாகி நம் ஆரோக்கியத்திற்கும், உயிருக்கும் சவால் விடுத்து வருகின்றன. ஜார்கண்ட் மாநிலம் சிங்பூமில் 17 வயது சிறுவன் ரசகுல்லா சாப்பிட்டுக்கொண்டே போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, ரசகுல்லா தொண்டையில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வெளியான தகவல்களின் படி இச்சம்பவத்திற்குப் பிறகு சிறுவன் சில நிமிடங்களுக்கு மூச்சுவிடவே சிரமப்பட்டுள்ளான். இச்சிறுவனின் பெயர் அமீத் சிங். இவரது மாமா வெளியூரீல் தங்கி பணிபுரிபவர். இவர் பணிமுடித்து 3 மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பிய நிலையில் சிறுவனுக்கு பிடிக்கும் என நினைத்து வரும்போது ரசகுல்லா வாங்கி வந்தார். இந்நிலையில் சிறுவன் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே ரசகுல்லாவை சாப்பிட்டுள்ளான். அப்போது, ரசகுல்லா சிறுவனின் தொண்டையை அடைத்துள்ளது.

சிறுவன் மூச்சுவிட சிரமப்படுவதைப் பார்த்த அமித் சிங்கின் மாமா அவரஒ உட்கார வைத்து ரஸகுல்லாவை வெளியே எடுக்க எவ்வளவோ முயற்சித்தும் அவரால் முடியவில்லை.
சில நிமிடங்களில் சிறுவன் மயங்கி சரிந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு மீட்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
