அடக்கொடுமையே.... சிகரெட் புகையை மாறி மாறி ஊதி ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்!!

 
ஃப்ரி வெட்டிங் சூட்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பழமொழி. ஆனால் சொர்க்கத்தையே திருமணத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என இளையதலைமுறையின் மோகம் திரும்பியுள்ளது. அந்த வகையில் திருமணத்திற்கு முன் ப்ரீ வெட்டிங் சூட் என்ற பெயரில் கலாச்சாரத்தை சீரழிக்கும் பலதரப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை எடுப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.   இந்தியாவை பொறுத்தவரை  பல்வேறு திருமண முறைகள் இருந்தாலும் அவரவர் கலாச்சார முறைப்படி நடத்திக் கொள்கின்றனர்.  

 

ஃப்ரி வெட்டிங் சூட்
சைவ, அசைவ விருந்து, பாட்டுக் கச்சேரி, அந்தாக்‌ஷரி, நடனம், நாட்டியம் என கேளிக்கை கொண்டாட்டங்கள் திருமணத்தில் . அதே நேரத்தில் ஃப்ரீ வெட்டிங் எனப்படும் திருமணத்திற்கு முந்தையை போட்டோ வெட்டிங் சூட்கள் பெரும் பாய்ச்சலுடன் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.  தற்போது வைரலாகும் ஒரு போட்டோ ஷூட்டில்  மணமகனுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் மணமகள், செயற்கை மழையை பெய்ய வைத்து அதில் மணமக்கள் முழுமையாக நனைய வைத்து புகைப்படம், வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையான புகைப்படங்கள், வீடியோக்கள் உயரமான மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை சூழல் நிறைந்த வனப்பகுதிகள், கடல்களில் கூட இப்படியான ஆபத்தான போட்டோஷுட்கள்  நடத்தப்பட்டு வருகின்றன.  

 

ஃப்ரி வெட்டிங் சூட்
கேரளாவில் சமீபத்தில் அரைகுறை ஆடைகளுடன் மணமகள் மற்றும் மணமகன் ஆகிய இருவரும் திருமணத்துக்கு முன்பு   ஃப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தப் புகைப்படங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. இந்த வீடியோவில்  மணமகனின் வாயோட வாய் வச்சு சிகரெட் புகையை மணமகள் உறிஞ்சி அதனை மணமகள் வெளியிடுகிறார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.  சிகரெட் புகைக்கு எதிராக உலகம் முழுவதும் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், மணமகனின் சிகரெட் புகையை மணமகள் வாய் வைத்து உறிஞ்சுவது அவரது உடல் நலத்திற்கும் கேடானது என நெட்டிசன்கள்  கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web