ரூ20க்காக சிறுவனை வீட்டில் பூட்டி வைத்த கொடூரம்!! கடைக்காரர் வெறிச்செயல்!!

 
நளினி

திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி பகுதியில் வசித்து வருபவர்   குமார். இவரது மனைவி நளினி. இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியில் வசித்து வரும்   4ம் வகுப்பு பள்ளி மாணவன் 20 ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு விட்டான்.  

இதையடுத்து கடையின் உரிமையாளர் நளினி, அதற்கான பணத்தை சிறுவனிடம் கேட்டுள்ளார். அந்த மாணவனிடம் பணம் இல்லாததால், கடை உரிமையாளர் அவனை வீட்டில் பூட்டி வைத்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த மாணவனின் தாய் கடைக்கு விரைந்து வந்தார்.

சிறுவன்


அப்போது மாணவனின் தாய்க்கும், கடை உரிமையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறுவன் அறியாமல் செய்ததாகவும், கடை உரிமையாளர் செய்தது தவறு எனக்கூறியும் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, சிறுவனை கடை உரிமையாளர் விடுவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web