சினிமா பைனான்சியரின் கொடூரம்.. பணியாளரை அடித்தே கொலைசெய்து பெட்ரோல் ஊற்றி எரிப்பு.. பகீர் பின்னணி !

 
வெங்கட்ராமன்

சென்னை மதுரவாயல் அடுத்த நொளம்பூர் எஸ்.பி., கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (48). சினிமா பைனான்சியர் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் இருந்து கடந்த 23ஆம் தேதி இரவு ஒருவர் அலறும் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் அங்கு செற்போது வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவானது தெரியவந்தது. மேலும் வீட்டின் மாடியில் உள்ள ஒரு அறையில் ரத்தக்கறைகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, சினிமா பைனான்சியர் வெங்கட்ராமனை தொடர்புகொண்டு போலீசார் பேசியபோது அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

வெங்கட்ராமன் மற்றும் அவரிடம் பணிபுரியும் மதுரவாயலைச் சேர்ந்த நவீன் (47), சரவணன் (29), திலீப் (30) ஆகிய நான்கு பேரும் சேர்ந்து, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த கலெக்ஷன் ஏஜன்டாக பணிபுரியும் பாபுஜி (50) என்பவரை கொலை செய்தது தெரியவந்தது.

வெங்கட்ராமன்

இதையடுத்து, நொளம்பூர் காவல் நிலையத்தில் நான்கு பேரும் சரணடைந்தனர். இவர்கள் நான்கு பேரும் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று கருகிய நிலையில் கிடந்த பாபுஜியின் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் விசாரணையில், சினிமா பைனான்சியரான வெங்கட்ராமனிடம், கலெக்ஷன் ஏஜன்டாக பாபுஜி பணிபுரிந்துள்ளார். இவர் வெங்கட்ராமனிடம் 10 லட்சம் ரூபாய் மற்றும் 5 சவரன் நகை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இரண்டு மாதங்களுக்கு முன்பே பணியில் இருந்து நீக்கிவிட்டார். எனினும் வெங்கட்ராமன் குறித்து அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

வெங்கட்ராமன்

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி பாபுஜியை நான்குபேரும் காரில் கடத்தி சென்றனர்.  வெங்கட்ராமனின் வீட்டின் மாடியில் உள்ள அறையில் வைத்து, நகை, பணம் குறித்து கேட்டு, இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதில், பாபுஜி நள்ளிரவு உயிரிழந்தார்.

இதையடுத்து, நேற்று முன்தினம் அதிகாலையில் உடலை காரில் எடுத்து சென்று, போரூர் அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள குப்பை கிடங்கில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் என்பது தெரியவந்தது. 

From around the web