வெள்ளத்தில் சிக்கி கொண்ட பேருந்து... அலறியடித்து ஜன்னல் வழியே குதித்த பயணிகள்... வைரலாகும் வீடியோ!

 
வெள்ளத்தில் பேருந்து

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், வடமாநிலங்களில் மழை தொடர்ந்து கொட்டி கொண்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிப்படைந்துள்ளது. மாடுகள், கார்கள், கேஸ் சிலிண்டர்கள் என வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிற வீடியோக்கள் வெளியாகி பதைபதைக்க வைக்கிறது. குஜராத் நிலைமை இன்னும் கவலை தருகிறது. இரண்டு மணி நேரத்தில் 124 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நஜிபாபாத் நகரில் இருந்து ஹரித்வாருக்கு 36க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பிஜ்னூர் கோட்வாலி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பயணிகள் பேருந்து  சிக்கிக் கொண்டது.


சிலர் ஜன்னல் வழியாக பேருந்தில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றனர். வெள்ளத்தில் பேருந்து அடித்துச் செல்லாமல் இருக்க ஜேசிபி மூலம் பேருந்தை நிறுத்த முயற்சி செய்தனர்.  இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.  பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.  யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த வீடியோவில், ஆற்றுப் பாய்ச்சலில் பேருந்து முழுவதும் பயணிகளைக் காணலாம். சிலர் ஜன்னல் வழியாக வெளியே செல்ல முற்படுகின்றனர். பேருந்து பயணிகளின் உதவிக்காக கிரேன் ஒன்று வருவதைக் பாலத்தின் மீது நின்றிருக்கும் ஒருவர்  வீடியோ எடுத்துள்ளார். கிரேன் மூலம் வாகனம் கவிழ்வதை தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web