விழுப்புரத்தில் சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. 10 நாட்களாக தேடுதல் வேட்டை!

 
சிறுமி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் கடந்த அக்டோபர் 12-ம் தேதி காணாமல் போன 7 வயது சிறுமி தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆலம்பூண்டி பகுதியில் சிறுமி ஒருவர் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இரவு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீட்டில் தூங்கச் சென்ற அவர், மறுநாள் அதிகாலையில் திடீரெனக் காணாமல் போனது தெரியவந்தது.

சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது சிறுமி மாயமாகி 10-வது நாளாகத் தொடர்கிறது. இவ்வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில்கொண்டு, விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சிறுமி

ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக ஒரு ஜோதிடர் மற்றும் சிறுமியின் தாயாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையைக் கையிலெடுத்துள்ளதால், விரைவில் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.