நாடு முழுவதும் 'IST' நேரத்தைக் கட்டாயமாக்கிய மத்திய அரசு!

 
IST நேரம் அலாரம் ஐஎஸ்டி கடிகாரம்

நாட்டில் உள்ள அனைத்து அதிகாரப்பூர்வ, வணிக மற்றும் டிஜிட்டல் சேவைகளிலும் இந்திய சீர் நேரம் மட்டுமே ஒரே அதிகாரப்பூர்வ நேரமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

லீகல் மெட்ராலஜி-2026 விதிகளின் அடிப்படையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் அரசிதழில் வெளியிடப்பட்டு, சரியாக 180 நாட்களுக்குப் பிறகு முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.

ஒரே நாடு ஒரே நேரம்

வங்கித் துறை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்து மற்றும் கணினி நெட்வொர்க்குகள் போன்ற பல்வேறு துறைகளில் வெவ்வேறு நேர முறைகளால் ஏற்படும் நேர வேறுபாடுகளைத் தவிர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.