தங்கத்தை பணமாக்கும் மத்திய அரசின் திட்டம்... முக்கிய நன்மைகள் என்னென்ன?!

 
தங்கம்

வீடுகளிலும் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தைப் பாதுகாப்பாக வங்கிகளில் டெபாசிட் செய்து, வட்டி வருமானம் ஈட்டும் வகையில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'தங்கம் பணமாக்கும் திட்டம்' பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்வதன் மூலம், தங்கம் பாதுகாப்பாக இருப்பதுடன் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவீத வட்டி வருவாயையும் பெற முடியும். வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தங்கத்திற்கு முழுமையான பாதுகாப்புடன், முதிர்வு காலத்தில் தங்கம் அல்லது அதற்கான பணமதிப்பைத் தகுந்த லாபத்துடன் பெற்றுக் கொள்ளலாம்.

தங்கம்

மக்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை ஆக்கப்பூர்வமான பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் தங்க இறக்குமதி தேவையைக் குறைக்க முடியும்.

முடங்கிடைக் கிடக்கும் தங்கம் சந்தைக்கு வருவதால் நாட்டின் தங்கப் பொருளாதாரம் உயர்வதோடு, ஒட்டுமொத்த நிதிச் சுழற்சியும் மேம்பட இத்திட்டம் பெரிதும் உதவுகிறது.