ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்பு... அமைச்சர் உறுதி!
இன்று ஆகஸ்ட் 15ம் தேதி வியாழக்கிழமை சுதந்திர தினம் இந்தியா முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கோட்டையில் கொடியேற்றி சுதந்திர தின விழா உரையாற்றினார். இதில் முதல்வர் விருதுகள் வழங்கப்பட்டன.

தகைசால் தமிழர் விருது குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு விருதுகள், கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டன. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் கலந்து கொள்வர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி செய்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது உறுதி எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
