”குழந்தைகள் அடங்கவே இல்லை”.. உணவு நிர்வாகம் பெற்றோர் மீது அபராதம்..!!

 
 ஜார்ஜியா உணவகம்

 ரெஸ்டாரெண்ட் ஒன்று, குழந்தைகளை 'ஒழுங்காக கவனித்துக் கொள்ளவில்லை' எனக்கூறி பெற்றோர்களிடம் 50 டாலர் கூடுதலாக வசூலித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் ப்ளூ ரிட்ஜில் உள்ள டோக்கோ ரெஸ்டாரெண்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு கைலேயும் அவரது மனைவி லிண்ட்ஸே லேண்ட்மேனும் சென்றுள்ளனர். இவர்கள் உணவு அருந்தி முடித்தவுடன், அந்த ரெஸ்டாரண்டின் உரிமையாளர் இவர்களிடம் வந்து, உங்கள் குழந்தைகள் அதிகம் சத்தம் போடுகிறார்கள் என்றும் அங்குமிங்கும் ஓடியாடியபடி இருக்கிறார்கள் என்றும் கூறி கூடுதலான தொகையை வசூலித்துள்ளார்.

"குழந்தைகள் மோசமாக நடந்துகொண்டார்கள்" அபராதம் வசூலித்த ரெஸ்டாரண்ட்

தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து அந்த ரெஸ்டாரெண்டின் கூகுள் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார் கைலே. ஃபுளோரிடாவைச் சேர்ந்த கைலே தம்பதிகள், தங்கள் மூன்று குழந்தைகள் மற்றும் நான்கு குடும்ப உறுப்பினர்களின் குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து அந்த ரெஸ்டாரெண்டிற்கு சென்றுள்ளனர். மூன்று முதல் எட்டு வயது வரையுள்ள 11 குழந்தைகள் அனைவரும் ஒன்றாக ஒரு டேபிளில் உட்கார்ந்துள்ளனர்.

உணவு வரும் வரை என் குழந்தைகள் மொபைல் போனை நோண்டிக் கொண்டிருந்தார்கள். அதன்பிறகு அமைதியாக சாப்பிட்டுவிட்டு என் மனைவியோடு வெளியே நின்றனர் என கைலே கூறுகிறார். எந்த குழந்தையும் மோசமாக நடந்து கொள்ளவில்லை என கைலேயின் மனைவியும் கூறியுள்ளார். டெசர்ட்டை சாப்பிட்டு முடித்ததும் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற சமயத்தில் தான், ரெஸ்டாரெண்டின் உரிமையாளர் டிம் ரிச்சர் வந்தார். குழந்தைகளை பெற்றோர்கள் 'ஒழுங்காக' கவனிக்காததால் உங்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக அவர் எங்களிடம் கூறினார். ஆனால் குழந்தைகள் முழு நேரமும் எங்கள் கண் பார்வையில் தான் இருந்தார்கள் என லிண்ட்ஸே கூறுகிறார்.

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் இந்த கூடுதல் தொகை வசூலிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். இதுவரை யாருக்கும் நாங்கள் கூடுதல் தொகையை வசூலிக்கவில்லை. இந்த குடும்பம் வந்தபோதுதான், அவர்களின் ஒன்பது குழந்தைகள் ரெஸ்டாரெண்ட் முழுவதும் ஓடிக்கொண்டிருந்தார்கள். மேலும் அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்தேனே தவிர பணம் எதையும் வசூலிக்கவில்லை. பெற்றோர்கள், பெற்றோர்களாக இருக்க வேண்டும் என ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் தெரிவிக்கிறார். ஆனால் இந்த ரெஸ்டாரெண்டின் தரம் குறைவான சேவைக்காகவும் உரிமையாளரின் நடத்தை குறித்தும் பலரும் விமர்சித்துள்ளார்கள்.
Restaurant adds $50 surcharge 'for adults unable to parent' | WFLAமூன்று பெரியவர்கள், இரண்டு குழந்தைகள், நான்கு மாத குழந்தை ஒன்று என அனைவரும் இந்த ஹோட்டலுக்கு சென்றிருந்தோம். அப்போது குழந்தை அழாமல் இருக்க என் மனைவி தாலாட்டிக் கொண்டிருந்தார். இதெல்லாம் எங்கள் ஹோட்டலில் வைத்துக் செய்யக்கூடாது என கூறிய அந்த உரிமையாளர், மோசமான முறையில் எங்கள் குழந்தை இருந்த பெட்டியை தட்டிவிட்டார் என ஒருவர் விமர்சித்துள்ளார். உங்கள் குழந்தைகளின் அழுகை குரலை கேட்பதும், அவர்கள் வீசியெறிந்த உணவை துடைப்பதும் எவ்வளவு கடினமானது தெரியுமா? உங்கள் குழந்தையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஏன் ஹோட்டலுக்கு சாப்பிட வருகிறீர்கள் என அந்த ஹோட்டலில் வேலை செய்யும் பெண் ஒருவர் பதிவிட்டுள்ளார்.  

From around the web