வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்.. கடித்து குதறிய தெரு நாய்கள்!

 
திருநீலகண்டர் சிறுவர்கள்

ஈரோடு அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளை தெருநாய் கடித்ததால் தடுக்க முயன்றவர் உட்பட 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரோடு மாவட்டம், பவானி பேரூராட்சிக்கு உட்பட்ட திருநீலகண்டர் வீதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ​​அங்கு சுற்றித் திரிந்த தெருநாய், விளையாடிக் கொண்டிருந்த சுபாஷினி (7), சஸ்திகாஸ்ரீ (6), சஞ்சனா (11), பிரித்விகா ஆகிய 4 சிறுமிகளை திடீரென கடித்தது. அப்போது மணிகண்டன் என்ற வாலிபர் சிறுமிகளை காப்பாற்ற முயன்றார். ஆனால் மணிகண்டனையும் நாய் கடித்தது. இதையடுத்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் நாயை துரத்தி சென்று குழந்தைகளை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பவானி நகரில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிவது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என காயமடைந்த குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!