ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை கரம் பிடித்தார் 'கோப்ரா' பட நடிகை... பிரபலங்கள் வாழ்த்து!

 
ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணு கோப்ரா மிருணாளினி ரவி

'சூப்பர் டீலக்ஸ்', 'கோப்ரா', 'ரோமியோ' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை மிருணாளினி ரவி, சர்ச்சைக்குரிய ஆன்மிகப் பேச்சாளரான மகா விஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மலேசியாவின் லங்காவி தீவில், இந்து முறைப்படி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை மிருணாளினி ரவி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்தத் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணு கோப்ரா மிருணாளினி ரவி

ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் குருகுலக் கல்வி மற்றும் முன்ஜென்மப் பாவங்கள் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக எழுந்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டதும், பின்னர் அவர் தனது அறக்கட்டளையை மூடியதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணு கோப்ரா மிருணாளினி ரவி

தற்போது நடிகை மிருணாளினி ரவி மகா விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டுள்ள செய்தி கோலிவுட் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் இவர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.