'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா' போர்வையில் பாலியல் தொழில் சாட்டையை சுழற்றிய ஆணையர் !!

 
sஅ


திருச்சியில் முன்பு ஆண்களுக்கு தனியாக சலுான்களும், பெண்களுக்கு பியூட்டி பார்லரும் இயங்கி வந்தன. இது ஒரு காலகட்டத்தில் இருபாலருக்குமான "யுனிசெக்ஸ்" பார்லர்களாக மாறின இதுவே 5 ஆண்டுகளுக்கு முன்பு "ஸ்பா"வாக உருமாறின  இதில் இருந்துதான் வில்லங்கங்கள் ஆரம்பமானது. ஆயுர்வேத சிகிச்சையில் அனுபவம் உள்ளவர்கள் லைசன்ஸ் பெற்று சில இடங்களில் மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றனர் ஆனால் யுனிசெக்ஸ் பார்லர்கள் மற்றும் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பல இடங்களில் பாலியல் தொழில் நடந்து வருகிறது.
இதுகுறித்த புகார்கள் வரும் பார்லர்கள் மீது போலீசார் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர்

ட்ட்

சமீபத்தில் சத்திரம் பஸ்நிலைய பகுதியில் இயங்கி வந்த மசாஜ் சென்டர் நடத்திய நபர் விபச்சா ரத்தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார் இவர் மீது குண் டர் தடுப்பு சட்டம் பாய்ந்து விடாமல் இருக்க லஞ்சம் வாங்கிய விபச்சாரத்தடுப்பு பிரிவு எஸ்ஐ ரமா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் லஞ்சஒழிப்பு போலீசார் சமீபத்தில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சுந்தியபிரியாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் இதையடுத்து மாநகர பகுதியில் இயங்கி வந்த ஸ்பாக்களில் துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் நேரடியாகச் சென்று ரெய்டு நடத்தினர்.

ஸ்பா
இந்த ரெய்டு குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது," விபச்சாரத்தடுப்பு பிரிவில் வசூல்வேட்டை அதிகரித்து விட் டது. "கூகுள் பே" மூலம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட 3 போலீசார் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர் என்கிறார்கள்.  மாநகர பகுதியில் 37 மசாஜ் சென்டர்கள் உள்ளன. இதில் பாலியல் தொழிலை கண்டுகொள்ளாமல் இருக்க சென்டருக்கு லட்சக்கணக்கில் தனித்தனியாக பணத்தை வசூல் செய்து அதை பங்கு பிரித்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
மசாஜ் சென்டர்கள் நடத்த சுகாதாரத்துறை அடுத்ததாக காவல்துறை ஆகியவற்றில் லைசன்ஸ் பெற வேண்டி விண்ணப்பித்து உரிமம் வாங்க வேண்டும். இந்தவகையில் மாநகரில் முறையாக லைசன்ஸ் பெற்று 10 சென்டர்கள் மட்டுமே நடந்துள்ளது மீதமுள்ள 27ல் மசாஜ் என்ற போர்வையில் பாலியல் தொழில்தான் நடத்தி வந்துள்ளனர் இதை கண்டு கொள்ளாமல் இருக்கவே பணம் கொடுத்து சரிகட்டியுள்ளனர். உரிய லைசன்ஸ் இல்லாமல் மசாஜ் சென்டர்கள் இயங்கக்கூடாது என்று மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா சதிராட்டம் போடுகிறாராம் ஆனால் வருமானம் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் ஆய்வாளர்களும் இவரை இடமாற்றம் செய்ய காயை நகர்த்தி வருகிறார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web