சுருண்டு விழுந்த காங்கிரஸ் வேட்பாளர்.. புதுச்சேரி பிரச்சாரத்தில் பரபரப்பு!

 
வைத்திலிங்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் புதுச்சேரியும் ஒன்று.   புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்பி வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மீண்டும் வெற்றி பெறுவதற்காக பிரசாரம் செய்து வருகிறார். இன்று மதியம் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் தனது கட்சியினருடன் புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார். அப்போது வைத்திலிங்கம் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதட்டமான சூழல் உருவானது.

இதையடுத்து மற்ற நிர்வாகிகள் வைத்திலிங்கத்தை மீட்டு அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. 15 நிமிடம் ஓய்வெடுத்த வைத்திலிங்கம் மீண்டும் பிரசாரத்துக்கு புறப்பட்டார். மதியம் கடும் வெப்பத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web