வெடித்த சர்ச்சை.. பண மூட்டையில் படுத்து புரளும் பாஜக கூட்டணி நிர்வாகி!

 
 பெஞ்சமின் பாசுமேதாரி

பாஜக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவர் பணக் குவியலில் படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அசாமில் பாஜகவின் NDA கூட்டணியில் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) உள்ளது. பிரமோத் போரோ தலைமை வகிக்கிறார். இந்நிலையில், இக்கட்சியின் தலைமை நிர்வாகியும், கிராம சபா வளர்ச்சிக்குழு தலைவராக பெஞ்சமின் பாசுமேதாரி உள்ளார். 

இவர் ரூ.500 நோட்டுகள் அடங்கிய பண கட்டுகளில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் இது தொடர்பாக கட்சி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஊழலை ஒழிப்போம் என்று பேசும் மோடி அரசு, இதுபோன்ற சம்பவங்களை அலட்சியப்படுத்துகிறது.

எப்படியிருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படி ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் தற்போது மக்கள் மத்தியில் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web