மரண ஓலம்... புனேவில் விஷச்சாராயம் குடித்த 16 பேர் லி; ஒருவர் கைது!

 
சாராயம் சாராயம்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட விஷச்சாராயத்தைக் குடித்த 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புனேவின் புறநகர்ப் பகுதியில் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சட்டவிரோதமாகக் காய்ச்சப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கிப் பருகிய பலருக்கு, அடுத்த சில மணி நேரங்களிலேயே கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி 16 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், விஷச்சாராயம் குடித்ததால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள 3 பேர் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

பள்ளி மானவி தற்கொலை

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், புனே மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்டமாக, அந்தப் பகுதியில் விஷச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

போதை குடி சாராயம் குற்றம் க்ரைம்

இந்த விஷச்சாராயம் எங்குத் தயாரிக்கப்பட்டது? இதற்குப் பின்னணியில் இருக்கும் கும்பல் யார்? எந்தெந்த வேதிப்பொருட்கள் இதில் கலக்கப்பட்டன? என்பது குறித்துக் கைது செய்யப்பட்ட நபரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராய ஆலைகளை ஒழிக்க மகாராஷ்டிர அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலிலும், புனேவில் ஒரே நாளில் 16 பேர் விஷச்சாராயத்திற்குப் பலியாகியிருப்பது அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.