“நாட்டின் கலாச்சார சக்தி தமிழ்நாட்டில் முழுமையாக வெளிப்படுகிறது” - சென்னை ஐஐடி விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்!

 
மோடி

சென்னை ஐஐடியில் இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆன்மீகமும் நவீன வளர்ச்சியும் கைகோர்த்துச் செல்லும் தமிழ்நாட்டின் சிறப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

சிவபெருமானின் புனித பூமியான தமிழ்நாட்டில் ஜலகண்டேஸ்வரரின் நல்லாசிகளைப் பெற்றது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். ஆலயங்கள் முதல் அதிநவீன மெட்ரோ ரயில் திட்டங்கள் வரை நாட்டின் உன்னத கலாச்சாரச் சக்தி தமிழ்நாட்டில் முழுமையாக வெளிப்பட்டு வருவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மோடி

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பயணத்தை மத்திய அரசுடன் இணைந்து தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.