கள்ளச்சாராயம் குடித்ததால் நேர்ந்த விபரீதம்.. 4பேர் அடுத்தடுத்து பலியான சோகம்!

 
குஜ்ரான்

பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் உள்ள திர்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் குஜ்ரான் . இன்று காலை இங்கு சாலையில் 4 பேர் இறந்து கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், 4 பேரும் நேற்று முன்தினம் இரவு கள்ளச்சாராயம் அருந்திவிட்டு இறந்தது தெரியவந்தது.


போலீசாரின் மேலதிக விசாரணையில் உயிரிழந்தவர்கள் போலா சிங் (50), நிர்மல் சிங் (42), பர்கத் சிங் (42), ஜக்ஜீத் சிங் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நால்வரும் குஜ்ரான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சங்கரூர் மூத்த போலீஸ் சூப்பிரண்டு சர்தாஜ் சிங் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக குஜ்ரான் கிராமத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மது கடத்தல்காரர் மன்பிரீத் சிங் மற்றும் அவரது கூட்டாளி சுக்விந்தர் சிங் ஆகியோருடன் தொடர்புடைய மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web