இன்றுடன் அவகாசம் நிறைவு... கேஸ் சிலிண்டர் eKYC உடனே சரி பார்த்துடுங்க... வீட்டிலிருந்தே ஈஸியாக நிறைவு செய்யும் வழிமுறைகள்!
Aug 31, 2026, 06:00 IST
இன்று ஆகஸ்ட் 31ம் தேதியுடன், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான eKYC விவரங்களை புதுப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடைகிறது. இன்று மாலைக்குள் விவரங்களைப் புதுப்பிக்கத் தவறினால் எரிவாயு இணைப்பு தற்காலிகமாகத் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியில் லாகின் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள 'eKYC' விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் எளிய முறையில் முக அங்கீகாரம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே ஆன்லைனிலேயே இந்தப் பணியை முடிக்க முடியும்.

அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ள இந்த இறுதி அவகாசத்திற்குள் பயனாளர்கள் தங்களது eKYC பதிவை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால உடனடியாக இதுவரை விவரங்களைப் பூர்த்தி செய்யாதவர்கள் இன்று இந்த பணியை முடிச்சிடுங்க.
