மாணவர்கள் வெளிநாட்டு, உயர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க நவ.9 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

 
தமிழக அரசு உதவித்தொகை கடன் திட்டம் ரூபாய் ரொக்கம் லோன்

தமிழ்நாடு அரசு சார்பில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில்வதற்காக வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் நவம்பர் 9-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகச் சிறுபான்மையினர் நல ஆணையர் அறிவித்துள்ளார்.

2026-2027-ஆம் கல்வியாண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உலகளாவிய உயர்தரக் கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் வெளிநாடுகளுக்குச் சென்று முதுகலைப் படிப்பு பயிலத் தேர்வு செய்யப்படும் 10 சிறந்த முஸ்லீம் மாணவர்களுக்கு, ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ₹36.00 லட்சம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. 

முன்னதாக இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு அக்டோபர் 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் தற்போது கால அவகாசம் வரும் 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

மானியம் உதவித்தொகை

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் சில முக்கியக் கல்வி மற்றும் பொருளாதாரத் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்:

உலகளாவிய QS தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களிடம் இருந்து 2026-2027 கல்வியாண்டிற்கான நிபந்தனையற்ற சேர்க்கைக் கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ₹8.00 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண்கள் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி விகிதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல், சட்டம், மனிதநேயம் மற்றும் வேளாண்மை அறிவியல் உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகளில் முதுகலைப் படிப்பிற்கான சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

விஜய் விவசாயி உதவித்தொகை

ஏற்கனவே வெளிநாடு சென்று கல்லூரியில் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களோ அல்லது வெளிநாடு சென்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களோ பரிசீலிக்கப்பட மாட்டாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

தகுதியுடைய மாணவர்கள் அரசின் www.bcmbcmw.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் ஆவணங்களுடன் இணைத்து 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், சேப்பாக்கம், சென்னை-600 005' என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சல் மூலமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.