தவெக நிர்வாகியின் 5 மாடி வணிகக் கட்டிடம் இடிக்க நடவடிக்கை - அனுமதியின்றி கட்டப்பட்டதாக மாநகராட்சி தகவல்!

 
கட்டிடம் கட்டடம் இடிக்க மாநகராட்சி நகராட்சி

சென்னையை அடுத்த பெருங்குடியில் கிராம நத்தம் நிலத்தில், உரிய அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஆர்.கார்த்திக்கின் 5 மாடி வணிகக் கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையை அடுத்த பெருங்குடியில் கிராம நத்தம் நிலத்தில், தவெக நிர்வாகி ஆர்.கார்த்திக் என்பவர் முறையான அனுமதியின்றி 5 மாடி வணிகக் கட்டிடத்தைக் கட்டி வருவதாகக் கூறி, திருவொற்றியூரைச் சேர்ந்த கே.விமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு, மாநகராட்சி தரப்பில் உரிய அனுமதியின்றி கட்டப்பட்ட இக்கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சியின் விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.