டிராபிக் போலீஸ் ஆக மாறிய மாவட்ட ஆட்சியர்.. முகாமில் கூடிய அதிக கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அசத்தல்..!!

 
பாஸ்கர பாண்டியன்

நாட்றம்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாமில் அலைமோதியை கூட்டத்தை டிராபிக் போலீஸ் போல் மாவட்ட ஆட்சியர்  கூட்டத்தை கட்டுப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பொதுமக்கள் மருத்துவ காப்பீடு அட்டை பெற சுமார் 1000  பேர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குவிந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

இந்த நிலையில் திடீரென டிராபிக் போலீஸ் ஆக மாறிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூட்டத்தை அவரே ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் மருத்துவ காப்பீடு அட்டை பெற விண்ணப்ப படிவங்களை துறை சார்ந்த அதிகாரிகள் பெற்றுக்கொண்டு பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முகாமில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமார், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

From around the web