“ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே திமுக திமிராகப் பேசுகிறது!” - உதயநிதிக்கு முதல்வர் விஜய் அதிரடி பதிலடி!

 
விஜய் விஜய்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தவெக அரசை "இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அரசு" என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காரசாரமான பதிலைப் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக அவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இந்த அரசு ரீல்ஸ் போடும் அரசாக இல்லாமல், ரியல் அரசாக இருக்க வேண்டும்" எனச் சாடினார். இதற்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் விஜய், "நாம் மக்களின் உண்மையான உணர்வுகளை நம்பி ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அது புரியாமல் ரீல்ஸ், ரியல் எனச் சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்."

விஜய்

"தனது ரீல்ஸ் எப்போதோ அறுந்துபோனது கூடத் தெரியாமல் திமுக திமிராகப் பேசுகிறது. ஆனால், உண்மையில் ரியாலிட்டி தெரியாமல் ரீல்ஸ் உலகிலேயே இன்னும் மிதந்து கொண்டிருப்பது இதே திமுக தான்" எனப் பதிவிட்டுள்ளார்.

மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதை மறைக்கவே திமுக இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதாகக் குறிப்பிட்ட அவர், தவெக அரசு தனது செயல்பாடுகள் மூலம் மிக விரைவில் மக்களுக்குப் பதிலளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

விஜய்

ஆட்சி அமைந்த முதல் நாளிலேயே ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே 'ரீல்ஸ்' மற்றும் 'ரியல்' குறித்த இந்த வார்த்தைப் போர், வரும் நாட்களில் சட்டமன்ற விவாதங்கள் இன்னும் அனல் பறக்கும் என்பதைக் காட்டுகிறது.