பகீர் சிசிடிவி காட்சிகள்... உயிருக்கு போராடும் நோயாளி... அலட்சியமாக ரீல்ஸ் பார்த்த மருத்துவர் !

 
மருத்துவமனை


 
உத்திரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி  மாவட்டத்தில் அமைந்துள்ள மருத்துவ மனையில் நடந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரவேஷ் குமாரி என்று 60 வயது மூதாட்டி நேற்று மாரடைப்பின் காரணமாக அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.


 


அப்போது மூதாட்டியை கவனிக்காமல் மருத்துவர் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.  பணியில் இருந்த ஆதர்ஷ் சங்கர் என்ற டாக்டர் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 15 நிமிடங்களில் மூதாட்டி உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.மூதாட்டியின் உடல்நிலை மோசமடைவதாக தொடர்ந்து அவருடைய மகன் கத்தி கூச்சலிட்ட போதிலும் மருத்துவர் அதனை கவனிக்காமல் செல்போனில் மூழ்கிக் கிடந்தார்.  

பின்னர் மூதாட்டி உயிரிழந்து விட்டதால் அங்கு பிரச்சனை ஏற்பட்ட நிலையில் உடனடியாக காவல்துறையினர் வந்து பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்த  சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் உறுதி கொடுத்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web