சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நாய்.. வெடித்த சண்டையில் பரிதாபமாக உயிரிழந்த முதியவர்.. விவரம் உள்ளே!

 
சிக்கன் ரைஸ்

ராணிப்பேட்டை மாவட்டம், மக்கட்டா அருகே உள்ள குப்படிசாத்தம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி (72), இவரது மகன் சண்முகம் நேற்று இரவு தந்தைக்கு சிக்கன் ரைஸ் வாங்கித் தந்ததாகத் தெரிகிறது. பக்கத்து வீட்டு நாய் சிக்கன் ரைஸில் வாயை வைத்ததால்  ஆத்திரமடைந்த சண்முகம் நாயை அடித்துள்ளார். இதனால், நாயின் உரிமையாளரான பக்கத்து வீட்டுக்காரர் சிவா நாயை ஏன் அடித்தீர்கள் என்று கேட்டார். இருவரும் குடிபோதையில் இருந்ததால் வாக்குவாதம் வன்முறையாக மாறியது.

சண்டையை தடுக்க வந்த சண்முகத்தின் தந்தை முனுசாமியையும் சிவா கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த முனுசாமிக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் முனுசாமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கூட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர் ஜெயகாந்தன், தனிப்படை போலீஸார் ரகுராமன் ஆகியோர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தடியடி நடத்தி கொன்ற சிவாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web