திருமணத்துக்கு ஒத்துக்கல... 25 முறை இளம்பெண்ணை கத்தியால் கொலை ... டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்!
கர்நாடக மாநிலம் பெங்களூரு எடியூரில் வசித்து வருபவர் கிரீஷ் என்ற ரியான் கான். 35 வயதாகும் இவர் பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு கணவரை இழந்த 42 பரிதா கானத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.பெங்களூரு ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் பரிதா கானம் வேலை பார்த்து வந்தார். பரிதா கானத்திற்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவருடைய் முதல் மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், பரிதா கானத்தை திருமணம் செய்துகொள்ள கிரீஷ் முடிவு செய்தார். இதனையடுத்து ஜெயநகரில் உள்ள ஷாலினி பூங்காவில் வைத்து கிரீஷ் , பரிதா கானம் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனார். கிரீஷ் மசாஜ் சென்டர் வேலையை விட்டுவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். இதற்கு பரிதா கானம் தனக்கு 2 பிள்ளைகள் உள்ளதால் திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். ஆத்திரம் அடைந்த கிரீஷ், தான் மறைத்து வைத்திந்த கத்தியால் பரிதா கானத்தை 25 இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
தானாகவே காவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், எடியூரில் வசித்து வரும் கிரீசுக்கு திருமணமாகவில்லை. இந்து மதத்தை சேர்ந்த அவர் 2011ல் முஸ்லிம் மதத்திற்கு மாறி தனது பெயரையும் ரியான் கான் என மாற்றிக் கொண்டார். கிரீசுக்கும், அவரது தங்கைக்கும் திருமணத்துக்கு வரன் கிடைக்காததால் மீண்டும் இந்து மதத்திற்கு கிரீஷ் மாறினார். இந்நிலையில் 2022ல் கிரீசுக்கு பரிதா கானத்துடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. திருமணத்திற்கு பரிதா கானம் மறுப்பு தெரிவிக்கவே அவரை 25 முறை கத்தியால் குத்தி கிரீஷ் கொடூரமாக செய்துள்ளார். இதனை வாக்குமூலமாக அளித்து கிரீஷ் தானாகவே காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!